நுவரெலியா நோர்வுட் தமிழ் மகாவித்தியாலயத்தில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா!

norwood
norwood

நுவரெலியா மாவட்டத்திலுள்ள நோர்வுட் தமிழ் மகா வித்தியாலயத்தில் பணிபுரிந்து வந்த ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நோர்வுட் பகுதில் உள்ள பாடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்கள் மீண்டும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.

நோர்வுட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வரும் மாணவர்களோடு தொடர்புகளை பேணிவந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் நோர்வுட் நிவ்வெளி தமிழ் வித்தியாலயம் மற்றும் அயரபி தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பபட்டதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்