கேகாலை வைத்தியரின் கொரோனா தடுப்பு மருந்திற்கு அனுமதி வழங்கவில்லை- சுகாதார அமைச்சு

images 1 3
images 1 3

கேகாலை ஹெட்டிமுல்ல வைத்தியரின் கொரோனா தடுப்பு மருந்திற்கு அனுமதியோ அங்கீகாரமோ வழங்கவில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் உணவு அதிகாரசபையோ அல்லது மருந்து அதிகாரசபையோ இந்த மருந்திற்கு அனுமதி வழங்கவில்லை என சுகாதார சேவைகள் பிரதிபணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட மருந்தினை சோதனைக்கு உட்படுத்தி அனுமதி வழங்கப்பட்டதா? என்ற கேள்விக்கு சுகாதார அமைச்சு அவ்வாறான அனுமதியை வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த பொருளையும் மருந்து அதிகாரசபை அல்லது உணவு அதிகாரசபை அங்கீகரிக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் நான் அறிந்தவகையில் அந்த பொருள் மருந்தாகவோ அல்லது உணவாகவோ விசேடமாக அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் சதுரகுமாரதுங்க குறிப்பிட்ட மருத்துவர் தன்னை ஆயுர்வேத வைத்தியராக பதிவு செய்துகொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவருக்கு எதிராக முறைப்பாடுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பதால் அவரை விசாரணைக்கு உட்படுத்தப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.