தலைமையின் துரோகம், சஜித் அரசியலிலிருந்து ஓய்வு!

s.premadasa 1 1
s.premadasa 1 1

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்டிருந்த சஜித் பிரேமதாச அரசியலில் சிறிது காலம் ஒதுங்கியிருப்பதாகவும் தேர்தல் பிரச்சாரக் காலத்தில் நம்பியர்கள் என்னை ஏமாற்றி விட்டதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.

எனது கட்சியின் தலைமை எனக்கு துரோகம் இழைத்து விட்டது. எனக்குரிய பணத்தை கட்சி வழங்கவில்லை. நான் தற்போது கடனாளியுள்ளேன். தேர்தல் பிரச்சாரத்திற்கு பணமின்மையால் நெருக்கடிகளை எதிர்கொண்டேன். எனக்கு துரோகம் செய்யப்பட்டுள்ளதாக உணர்கிறேன். சிலர் பாம்புகளை போல செயற்பட்டனர்.

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களுடனான சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

என்னையும் எனது குடும்பத்தினரையும் முழுமையாக அர்ப்பணித்தே இந்தப் பயணத்தில் இறங்கினேன். நான் அமைச்சராக இருந்தபோது எனக்கென ஒரு வீட்டைக்கூட கட்டிக்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட நிலையில் நான் தோல்வியடைய வேண்டுமென, கட்சிக்குள் சிலர் விரும்பினர். எனினும் பலர் நான் வெற்றியடை வேண்டுமென ஆசைப்பட்டனர்.

தற்போதைய நிலையில், புதிய கட்சி ஆரம்பிக்கும் எந்த நோக்கமும் எனக்கு இல்லை. அதற்காக ரணிலுடன் தலைமைப் பதவிக்காக சண்டைபிடிக்கவுவும் மாட்டேன். கட்சியினர் பேசி ஒரு தீர்மானத்திற்கு வரட்டும். அதுவரை நான் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க தீர்மானித்துள்ளேன் எனவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.