மருதமுனை வைத்தியசாலை கொரோனா நிலையமாக மாற்றப்பட்டு சேவைகள் முன்னெடுப்பு

625.500.560.350.160.300.053.800.900.160.90 2 3
625.500.560.350.160.300.053.800.900.160.90 2 3

மருதமுனை பிரதேச வைத்தியசாலை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் விசேட வைத்திசாலையாக செயற்படுவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை(09) முதல் இதுவரையும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என 68 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இது முழுக்க பெண்கள் மற்றும் சிறுவர்களை மட்டுமே அனுமதிக்க மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம்.அஸ்மி கருத்து தெரிவித்தார்.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வழிகாட்டல் ஆலோசனைக்கமைய செயற்படுத்தப்படும் இந்நிலையமானது சகல வசதிகளும் கொண்ட கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையமாக மாற்றப்பட்டு சிறப்பான சேவைகள் முன்னெடுக்கப்படுகிறது.

இதன்போது குறித்த வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் நிலையில் பிரதேச மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்று உறுதியாகத் தெரிவித்து, தெளிவுபடுத்திய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி ஜீ.சுகுணன், அதனால் எதிர்காலத்தில் இவ்வைத்தியசாலை பல்வேறு வசதிகளைப் பெற்று, முன்னேற்றமடைய வாய்ப்பிருப்பதாக சுட்டிக்காட்டினார்.