சிறைச்சாலை கொரோனா தொற்றாளர்களுக்கு விசேட சிகிச்சை மையங்கள் – சவேந்திர சில்வா

சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு விசேட சிகிச்சை மையங்களை அமைக்கத் தீர்மானம் .

சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுக்காக இராணுவத்தின் பாதுகாப்பின் கீழ் யாழ்ப்பாணம், கந்தகாடு மற்றும் கல்லெல்ல ஆகிய பகுதிகளில் கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்கத் தீர்மானித்துள்ளனர் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு பகுதியில் அமைந்துள்ள 14 குடியிருப்புகளில் கொரோனா தொற்று காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை விரைவில் விடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் குடியிருப்புகளில் வசிக்கும் அனைத்து குடும்பங்களையும் உள்ளடக்கும் வகையில் பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதுள்ளமை தெரியவந்துள்ளது.