அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

1e7cb15b635824e4fb4254e324491d89 XL
1e7cb15b635824e4fb4254e324491d89 XL

அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு திருத்தங்களுடன், 97 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெற்றது.

தொழிநுட்ப கோளாறு காரணமாக கை உயர்த்தும் அடிப்படையில் வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் 97 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த நவம்பர் 17 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

நாட்டின் 75 ஆவது வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதேவேளை, அரசாங்கத்தினால் 2021 ஆம் ஆண்டுக்கான வருமானமாக ஆயிரத்து 961 பில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், 2021 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவீனமாக 3 ஆயிரத்து 525 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, வருமானத்திற்கும் செலவிற்கும் இடையில் ஆயிரத்து 564 பில்லியன் ரூபா துண்டுவிழும் தொகையாக மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.