கதிரியக்க உபகரண தொகுதியை விமானப்படைக்கு வழங்கிய அமைச்சர் துமிந்த திசாநாயக்க!

duminda 719x380 1
duminda 719x380 1

சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி திட்ட அபிவிருத்தி அமைச்சர் துமிந்த திசாநாயக்க விஷேட கதிரியக்க பொருள் கண்டறிதல் மற்றும் கதிரியக்க அளவீட்டு கருவி தொகுதி ஆகியவற்றை இலங்கை விமானப்படைக்கு வழங்கி வைத்தார்.

கொழும்பில் உள்ள அமைச்சில் வைத்து விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன நேற்றய முன்தினம் (டிசம்பர் 9) இந்த நன்கொடையை பெற்றுக்கொண்டார்.

இந்த உபகரண தொகுதியானது விமானப்படையின் இரசாயனவியல் உயிரியல் கதிரியக்க அணு மற்றும் வெடிபொருட்கள் பிரிவின் திறன்களை மேம்படுத்தவுள்ளது.

இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இலங்கையில் அணுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நோக்கத்துடன் தொடர்புடைய பங்குதாரர்களுக்கு உதவுகிறது.

நாட்டில் ஏற்படும் ஒரு அணுசக்தி அல்லது கதிரியக்க சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஏழு முக்கிய பங்குதாரர்களில் விமானப்படையும் ஒன்றாகும்.

இந்த கருவிகளின் திறனைக் கொண்டு இலங்கை சர்வதேச விமான நிலையங்கள் மூலம் அணுசக்தி மற்றும் கதிரியக்கப் பொருட்களின் கண்டறிதலே விமான படையின் முக்கிய நோக்கமாகும்.