திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர்!

1575271684 MK Stalin DMK 5
1575271684 MK Stalin DMK 5

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலினுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின் அடிக்கடி தனது தொகுதியான கொளத்தூருக்கு சென்று நலத்திட்ட உதவிகள் வழங்குவது வழக்கம். அதேபோல் இன்று காலையிலும் கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் ரெட்டேரி ஜங்சன் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பங்கேற்று உதவிகள் வழங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடல் சோர்வடைவதை அறிந்த மு.க.ஸ்டாலின் உட னடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றார். உடனடியாக அருகில் இருந்த ‘பார் ஆர்த்தோ’ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவருக்கு உடனடியாக அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. ரத்த அழுத்தம் அதிகமானதால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டிருந்ததால் அதற்கான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதில் அவரது உடல்நிலை சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.