தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி!

03b30003f91671c4e6ff6b1a50de4634 XL
03b30003f91671c4e6ff6b1a50de4634 XL

இலங்கை கிரிக்கெட் அணியானது இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்காவுக்கு இம் மாதம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகங்கள் இத் தொடரை உறுதிப்படுத்தியுள்ளன.

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இத் தொடரானது அமையவுள்ளது.

மருத்துவ சூழ்நிலைகள் காரணமாக தென்னாப்பிரிக்காவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான ஒருநாள் போட்டி இரத்து செய்யப்பட்டதையடுத்து இந்தத் தொடரில் சந்தேகம் எழுந்தது.

எனினும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகங்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ஷவுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி, தென்னாப்பிரிக்காவின் நிலைமை குறித்து விளக்கமளித்த பின்னர், சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

தற்போது நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் டிசம்பர் 16 ஆம் திகதி முடிவடைந்தவுடன் இலங்கை கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு புறப்பட உள்ளது.

ஜனவரி 8 ஆம் திகதி நாடு திரும்புவதற்கு முன்பு அவர்கள் ஜோஹன்னஸ்பர்க் மற்றும் செஞ்சுரியன் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மைதானங்களில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர்.