2022 ஆம் ஆண்டுக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தூய்மையான குடிநீர் – வாசுதேவ

நாணயக்கார

2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் முழுமையாக செயற்படுத்தப்படும். 2022 ஆம் ஆண்டுக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும்  தூய்மையான  குடிநீர் வழங்கப்படும் என நீர்வழங்கல் துறை அமைச்சர்  வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் வெற்றிகரமான முறையில் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்கும் தூய்மையான குடிநீர் வழங்கும் திட்டம் 2022 ஆம் ஆண்டு முழுமையாக நிறைவேற்றப்படும்.

இந்திய நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுத்தமான குடிநீர்  செயற்திட்டத்தை  இலங்கையில் செயற்படுத்த  ஆரம்ப கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மக்களின் அபிப்ராயத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே பாதீடு சிறந்த முறையில் காணப்படுகிறது.

மக்களுக்கான பணிகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும் போது மக்களே அரசாங்கத்தை பலப்படுத்துவார்கள். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள் என குறிப்பிட்டார்.