மருதனார் மடத்தில் 394 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை

202004241656205226 Tamil News Coronavirus PCR test intensity 1000 people checkup daily in SECVPF
202004241656205226 Tamil News Coronavirus PCR test intensity 1000 people checkup daily in SECVPF

மருதனார்மடம் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வியாபார நிலையங்களைச் சேர்ந்த 394 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று காலை(12) பெறப்பட்டன என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மருதனார்மடம் சந்தை வியாபாரி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி என இருவேறு தொழில்களில் ஈடுபடும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டது.

உடுவில் பிரதேச சபை ஒழுங்கையில் வசிக்கும் 38 வயதுடைய குடும்பத்தலைவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய கடந்த புதன்கிழமை எழுமாறாக மருதனார்மடம் சந்தி முச்சக்கர வண்டி சாரதிகளிடம் மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டது.

இந்த நிலையில் மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் அனைவரிடமும் இன்று சனிக்கிழமை மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன், முச்சக்கர வண்டிச் சாரதிக்கு கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் சுகாதாரத் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.