அன்னாசி பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்

download 1 8
download 1 8

அருமையான சுவை மற்றும் அட்டகாசமான வடிவமும் நிறைந்தது அன்னாசி பழம் ஆகும். இதில் ஏராளமான சத்துக்களும் மற்றும் ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வருபவர்களுக்கு அதிகமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

அன்னாசி பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் ப்ரோமெலைன், ப்ரோடீன், நார்ச்சத்து, வைட்டமின் எ, வைட்டமின் சி, பீட்டா- கரோட்டின், தையாமின், வைட்டமின் பி-5, பொட்டாசியம், கல்சியம், காப்பர், மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது.

இப்பொழுது நாம் அன்னாசி பழத்தினை தினமும் உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி காண்போம்.

மூட்டு வலிக்கு ஒரு சிறந்த நிவாரணம்
அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்னும் பொருள் உள்ளது. இது உங்கள் மூட்டுக்களில் தேய்மானம் ஏற்படும்போது ஏற்படும் வலியினை கட்டுப்படுத்த உதவுகின்றது. மேலும் இந்த ப்ரோமெலைன் ஆரோக்கிய சிறப்புகளை கொண்டது.

நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கின்றது
அன்னாசியில் வைட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது.இதனை தினமும் உண்டு வந்தால் உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும்.

காயங்களை விரைவில் ஆற்றுகின்றது
அன்னாசி பழத்தில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி உங்கள் காயங்களை விரைவில் ஆற்ற உதவுகின்றது. எனவே உங்கள் காயங்களை விரைவில் ஆற்ற அன்னாசி பலத்தினை உட்கொண்டு வரவும்.

அதிகமான நார்ச்சத்து
அன்னாசி பழத்தில் நிறைய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.இது உங்களுக்கு மலசிக்கல் ஏற்படாமல் காக்கின்றது.மேலும் உங்களின் ஜீரண மண்டலத்தினை வலுப்படுத்துகிறது. நார்ச்சத்து உணவுகள் உங்கள் குடலின் ஆரோக்கியத்திற்கும் மிக மிக முக்கியம்.

உடல் எடையினை குறைக்க உதவும்
அன்னாசி பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உங்கள் உடல் எடையினை குறைக்க உதவுகின்றது. மேலும் உங்கள் இருதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

இரத்த அழுத்தம் குறையும்
இன்றைய நவீன உலகில் பலபேர் உயர் இரத்த அழுத்தத்தினால் கஷ்டப்படுகின்றனர். இரத்த அழுத்தத்தினை குறைக்க பொட்டாசியம் நிறைந்த உணவுகள் மிக மிக முக்கியம். அன்னாசியில் அதிக அளவில் பொட்டாசியம் சத்து உள்ளது.

இதனை உண்டு வந்தால் உங்களின் இரத்த அழுத்தமானது கட்டுக்குள் இருக்கும். உயர் இரத்த அழுத்தத்தினால் அவஸ்தை படுபவர்கள் அன்னாசி பழத்தினை உண்டு வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.