நாட்டில் கவனிக்கப்பட வேண்டியவர்கள் சிறுவர்களே – ரூபவதி கேதீஸ்வரன்

GA Kilinochchi 2
GA Kilinochchi 2

கொரோனா அச்சுறுத்தல் நிலை காணப்பட்டாலும் புலமை பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களால் கிளிநொச்சி மாவட்டம் 8 ஆம் நிலையை பெற்றுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி புன்னை நீராவியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டிலே கவனிக்கப்படவேண்டியவர்கள் மிக முக்கியமாக சிறுவர்கள். அவர்களுடைய வளர்ச்சி, மகிழ்ச்சி என்பது உண்மையிலே அவரகளின் குடும்பத்திலே தங்கியிருக்கின்றது.

கல்வியை மாத்திரம் அவர்களுக்கு ஊட்டுவதன் ஊடாக மகிழ்ச்சியை கொடுத்துவிட முடியாது. அவர்களின் குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சியானதாக அமைய வேண்டும்.

நாங்கள் பல கஸ்டங்களை கடந்து வந்துவிட்டோம். பலபேர் இன்று யுத்தத்தின் வடுக்கள் தெரியாமல் இருக்கின்றீர்கள். ஆனால் இன்று உங்களுக்கு பல வசதிகள் கிடைத்துள்ளன. தற்போது உள்ள கொரோனா சூழ்நிலையில் கல்வியில் நாங்கள் பின்னுக்கு நிற்கின்றோம். கொரோனா எவ்வாறு தாக்கத்தை செலுத்தப்படுகின்றது என்பதை வருகின்ற முடிவுகளிலேயே  நாங்கள் பார்க்கலாம்.

ஆனாலும் கொரோனா உள்ளிட்ட சூழலிலும் புலமை பரிசில் பரீட்சை ஒன்று நடைபெற்று முடிந்திருக்கின்றது. அதனுடைய பெறுபேறுகளை பார்க்கின்றபோது எமது மாணவர்கள் சிறப்பாக தேர்ச்சி அடைந்திருக்கின்றார்கள். எமது மாவட்டம் 8 ஆவது நிலைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி தருகின்ற விடயம். அந்த வகையில் எத்தனை தடைகள் வந்தாலும் அதனை கடந்து சாதிக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.