வவுனியா வைத்தியசாலை வெளிநோயாளர்களிற்கான கொட்டகை திறந்து வைப்பு!

DSC00144
DSC00144

வவுனியா வைத்தியசாலை வெளிநோயாளர்களிற்கான கொட்டகை திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா வர்த்தக சங்கத்தினால் வவுனியா வர்த்தகர்களின் நிதிப்பங்களிப்பில் அமைக்கப்பட்ட இவ் வெளிநோயாளர்களிற்கான கொட்டகையினை இன்றைய தினம் வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை வவுனியா வர்த்தக சங்கத்தினால் வவுனியா வைத்தியசாலைக்கான சுத்திகரிக்கப்பட்ட குடி நீருக்கான இணைப்புக்களும் செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமார், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், வர்த்தக சங்க செயலாளர் அம்பிகைபாகன் மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இவ் வெளிநோயாளர்களிற்கான கொட்டகையானது வவுனியா வர்த்தக சங்கத்தினால் வவுனியாவில் உள்ள வர்த்தகர்களின் ஐந்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.