நாட்டில் இடம்பெற்ற இருவேறு விபத்தில் இருவர் பலி!

accident logo1 620x330 1
accident logo1 620x330 1

இரத்தினபுரி மற்றும் கெகிராவை பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இரத்தினபுரி கொழும்பு வீதியின் பண்டாரநாயக்க மாவத்தைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 70 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றினை வீதியின் குறுக்காக தள்ளிச் சென்ற போது இரத்தினபுரியில் இருந்து குருவிட நோக்கி பயணித்த லொறி அவர் மீது மோதியுள்ளது.

இதன்போது, படுகாயமடைந்த நபர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, நேற்றிரவு (12) 7.45 மணியளவில் கெகிராவை, தம்புள்ளை வீதியின் சூரியகம சந்திக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெகிராவையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த இருவர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது 48 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்துக்குள்ளான மற்றைய மோட்டார் சைக்கிளின் சாரதி தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.