கிழக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

202009302144455709 Various Side Effects in Patients Cured of Corona Infection SECVPF
202009302144455709 Various Side Effects in Patients Cured of Corona Infection SECVPF

அக்கரைப்பற்று சந்தை கொத்தணி ஊடாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் நேற்று இரவு 11.48 மணிவரையிலான 12 மணித்தியாலயத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மூலம் புதிதாக 21 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அக்கரைப்பற்று சந்தை கொத்தணி 411 ஆக அதிகரித்துள்ளதுடன் கிழக்கில் 588 ஆக அதிகரித்துள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார திணைக்கள கொரோனா பிரிவின் நேற்று திங்கட்கிழமை இரவு 11.48 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா கொத்தணியையடுத்து அக்கரைப்பற்று சந்தை கொத்தணியில் இருந்து நேற்று திங்கட்கிழமை இரவு 11.48 மணிவரையிலான 12 மணித்தியாலயத்தில்

காரைதீவில் ஒருவரும், நிந்தவூரில் ஒருவரும், சாய்ந்தமருதில் ஒருவரும், அட்டாளைச்சேனையில் ஒருவரும், பொத்துவில் 12 பேரும் சம்மாந்துறையில் 3 பேரும், இறக்காமத்தில் 2 பேருமாக 21 பேர் புதிதாக கண்டறியப்பட்டுள்ளனர் .

கிழக்கு மாகாணத்தில் 4 சுகாதார பிராந்தியங்களான மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் 98 பேருக்கும், திருகோணமலை சுகாதார பிராந்தியத்தில் 18 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 20 பேரும் கல்முனை சுகாதார பிரிவில் 452 பேருமாக 588 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது

இதேவேளை கடந்த 24 மணித்தியாலயத்தில் கிழக்கு மாகாணத்தில் 21629 பேருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்ரெயன். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அக்கரைப்பற்று காவல்துறை பிரிவிலுள்ள அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை ஆகிய 3 பிரதேச செயலகப்பிரிவுகளும் மற்றும் மாளிகைக்கடு கிழக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.