வவுனியா தொற்றாளர்கள் ஏழு பேரும் கிளிநொச்சி முகாமிற்கு அனுப்பிவைப்பு!

IMG 20201111 WA0011
IMG 20201111 WA0011

வவுனியாவில் நேற்று தொற்றாளர்களாக இனம் காணப்பட் உட்பட ஏழுபேரும் நேற்று மாலை கிளிநொச்சி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இது குறித்து மேலும் தெரிவிக்கையில் ,

நேற்று வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து திருநாவற்குளம் பகுதியில் வசித்து வரும் காவல்துறை உத்தியோகத்தர் வவுனியா நீதிமன்றில் பணியாற்றி வருகின்றார். கடந்த 6 ஆம் திகதி நீதிபதியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணம் அனுப்பிவிட்டு மறுநாள் திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனையின் போது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .

இதையடுத்து கற்குழியில் 15 வயது பாடசாலை மாணவிக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . குறித்த மாணவி இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் கல்வி கற்று வருவதுடன் சகோதரன் இலங்கை திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்றுவருகின்றார் . காவல்துறை உத்தியோகத்தரின் மகன் தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றார் . சகோரதன் காமினி வித்தியாலயத்தில் கல்வி கற்றுவருகின்றார்.

இந்நிலையில் குறித்த பாடசாலைகள் சுகாதார நடைமுறைகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் கிருமித்தொற்று நீக்கப்பட்ட பின்னர் ஏனைய தொடர்புபட்டவர்களின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் பின்னர் பாடசாலைகளை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் .

மேலும் ஒருவர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்ட 25 வயது பெண்ணொருவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முடிவுகள் கிடைத்ததும் தனிமைப்படுத்தல் சட்டத்தில் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். தற்போது வவுனியாவில் தொற்று இணங்காணப்பட்ட சாளம்பைக்குளம் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உட்பட ஏழுபேரும் கிளிநொச்சி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு நேற்று மாலை அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.