தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நல்லூர் பிரதேச சபையின் பாதீடு இரண்டாவது தடவையும் தோல்வி!

easy business budgeting software
easy business budgeting software

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பிரதேச சபைத் தவிசாளர் தனது பதவி இழந்துள்ளார்.

20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 12 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்த அதே வேளை 8 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 4 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் இருவர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் 4 பேர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் ஐந்து பேர் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலா ஒரு உறுப்பினர் என 12 பேர் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

இரண்டு தடவைகள் நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தொற்கடிக்கப்பட்டுள்ளதால் தவிசாளரும் தனது பதவியை இழந்துள்ளார்.

இன்றிலிருந்து 14 நாட்களுக்குள் நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற வேண்டும் என்பது சட்ட ஏற்பாடாகும்.

கடந்த மாதம் 19 ஆம் திகதி சபையில் முன்வைக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.