நுவரெலியா மாநகர சபையின் அடுத்த ஆண்டிற்கான பாதீடு 12 மேலதிக வாக்குகளால் வெற்றி!

shutterstock 761334184 2 1000x500 1
shutterstock 761334184 2 1000x500 1

ஐக்கிய தேசிய கட்சியின் ஆளுகைக்கு கீழுள்ள நுவரெலியா மாநகர சபையின் அடுத்த ஆண்டிற்கான பாதீடு 12 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நுவரெலியா மாநகர சபையின் அடுத்த ஆண்டிற்கான பாதீடு மாநகர சபையின் முதல்வர் சந்தனலால் கருணாரத்னவால் இன்று சபையில் முன்வைக்கப்பட்டது.

இதன்போது பாதீட்டுக்கு ஆதரவாக ஜக்கிய தேசிய கட்சியின் 12 உறுப்பினர்களும் முதல்வர் உட்பட 13 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

பொதுஜன பெரமுனவின் 4 உறுப்பினர்களும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் 2 உறுப்பினர்களும் சபைக்கு வருகை தரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுஜன பெரமுனவின் ஒரு உறுப்பினர் எதிராக வாக்களித்துள்ளதோடு ஒருவர் நடுநிலை வகித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்களும் நடுநிலை வகித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.