கொழும்பில் அதிகரிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை

realistic coronavirus background 52683 35109
realistic coronavirus background 52683 35109

கொரோனா இரண்டாவது அலையின் போது கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 15,000 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 616 பேரில் 266 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொரோனா தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்து 123 ஆக அதிகரித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் 99 பேர் , கம்பஹா மாவட்டத்தில் 94 பேர், களுத்துறை மாவட்டத்தில் 48 பேர், இரத்தினபுரி மா வட்டத்தில் 31 பேர் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் 24 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்ட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 11 பேர், மாத்தறை மாவட்டத் தில் 08 பேர் , கேகாலை மாவட்டத்தில் 08 பேர், புத்தளம் மாவட்டத்தில் 04 பேர் , குருணாகல் மாவட்டத்தில் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காலி மாவட்டத்தில் 03 பேர், நுவரெலியா, அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் தலா 02 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.