இரணைமடு குளத்திலிருந்து மீன் குஞ்சுகள் வெளியேறாமல் பாதுகாப்பு வலைகள் அமைக்கும் பணிகள் ஆரம்பம்

Iranaimadhu 14
Iranaimadhu 14

இரணைமடு குளத்திலிருந்து மீன் குஞ்சுகள் வெளியேறாமல் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு வலைகள் அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று காலை 11 மணியளவில் இரணைமடு மீனவர் தொழில் வாடியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு குறிதத் பணியை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் குளத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அமைக்கப்பட்ட பாதுகாப்பு வலையினை மேலும் அதிகரித்தல், தொழில் சார் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை அமைச்சரிடம் மீனவர்கள் முன்வைத்தனர்.

நிகழ்வில் கரு்தது தெரிவித்த அமைச்சர், அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள குறித்த தேவைகளை அடுத்துவரும் மாதங்களில் தீர்த்து வைக்கப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார். குறிதத் தொழில் புரியும் பகுதிக்கு செல்லும் வீதி, மீனவர்களிற்கான தொழில் உபகரணங்கள், மீன் குஞ்சுகளை வெளியேறாது பாதுகாப்பதற்கான கட்டமைப்பை மே்படுத்தல், நன்னீர் மீன் குஞ்சுகளை வளர்ப்பதற்கான திட்டம், இரணைமடு குளத்தில் உள்ள வளங்களை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்களை தற்போது உள்ள அரசின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலில் முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவசாதன், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ் மாவட்ட நன்னீர் நீர் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர் சங்கீதன், வடமாகாண நீர்பாசன பணிப்பாளர், இரணைமடு நீர்பாசன பொறியியலாளர், மீனவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.