எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானம் தேவை – சவேந்திர சில்வா

71655ba6 saventhirasilvasep15
71655ba6 saventhirasilvasep15

எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானம் தேவை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் வடபகுதியில் குறிப்பாக யாழில் கொரோனா முதலாவது அலை தாக்கம் ஆரம்பம் முதல் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார நடைமுறைகளை வடபகுதி மக்கள் ஒழுக்கமாகவும், நேர்த்தியாகவும் கடைப்பிடிக்கிறார்கள். அதன் காரணமாக முப்படையினர் மற்றும் காவல்துறையினர், சுகாதாரப் பகுதியினரால் வடபகுதியில் இலகுவாக கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கூடியாதாகவுள்ளது.

அத்தோடு நேற்றைய தினம் கூட ஜனாதிபதி யாழ் மாவட்ட நிலவரம் தொடர்பில் எம்முடன் கலந்துரையாடினார். அத்தோடு அரசாங்க அதிபர் ஊடாக தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கண்காணித்து வருகிறோம் எனினும் எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய வாரமாக காணப்படுகின்றது. எனவே இரண்டு வாரங்களும் மக்கள் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அத்தோடு தமிழ் மக்களுக்கு இந்த கொரோனா நோயினை கட்டுப்படுத்துவதற்கு உதவியதற்காக நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் சார்பில் நான் தமிழ் மக்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.