கிழக்கில் அமைச்சுப் பொறுப்பிற்கு தகுதியானவர்கள் இல்லை!!

daglas thondaman
daglas thondaman

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள காபந்து அமைச்சரவையில் வடமாகாணம், மலையகம் சார்ந்து அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ள போதும் கிழக்கு மாகாண தமிழர்கள் சார்பில் ஒரு அமைச்சரேனும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் இது தொடர்பில் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் கிழக்கில் அமைச்சுப்பதவியை பொறுப்பேற்று கம்பீரமாய் நடத்த யாரும் இல்லை அதன் காரணமாகவே அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவில்லை என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது டக்களஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் ஆகிய இருவரையும் பற்றி சிங்கள மக்கள் நன்கு அறிவர் எனவும், உயர் மட்டம் வரை தொடர்புகொள்ளும் ஆற்றல் அவர்களிடம் உண்டு எனவும், அவர்களுக்கருகில் ஒரு படித்த அறிவுள்ள பகுத்தறிவுள்ள சரிபிழை ஆராய்ந்து செய்யகூடிய ஆற்றல் உள்ள ஒரு இருவராவது அருகில் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இவற்றின் காரணமாக கிழக்கின் எம்பிக்களுக்கு அமைச்சுக்கள் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.