வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுகூட்டம் ஆரம்பம்!

IMG 5551
IMG 5551

வவுனியா மாவட்டத்தின் இந்த வருடத்திற்கான இறுதி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வடமாகாண ஆளுனர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் கு.திலீபனின் இணைதலைமையில் இன்று மதியம் 2 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.


குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், வினோநோகராதலிங்கம், காதர் மஸ்தான், பிரதமசெயலாளர் அ.பத்திநாதன் உட்பட அதிகாரிகள், பிரதே சபை தவிசாளர்கள்கலந்து கொண்டனர்.

குறித்த கூட்டத்தில் வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன கலந்துகொள்ளவில்லை.
கடந்த வாரம் வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அரச சட்டவாதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் வவுனியா மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர், 
இதனையடுத்து அரச அதிபர் மற்றும் வவுனியாவில் உயர் பதவிகளில் உள்ளவர்களிற்கு விரைவாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைக்கான முடிவுகள் நேற்று (17) வெளியாகின. இதில் யாருக்கும் தொற்று இல்லையென முடிவாகியுள்ளது.

எனினும் அரச அதிபர் இன்றையதினம் இடம்பெற்றுவரும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார் நிகழ்வினை நெறிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG 5551
IMG 5549
IMG 5548 1
IMG 5550