சிறைச்சாலை மோதல்களை கட்டுப்படுத்த விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் அவதானம்!

fea03
fea03

சிறைச்சாலைகளில் ஏற்படும் மோதல்களை கட்டுப்படுத்த விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பிரகாரம் இலங்கை இராணுவத்தில் 12 வருட கால சேவையை நிறைவு செய்து ஓய்வுபெற்ற 500 பேரை இந்த பிரிவில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அண்மையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவர நிலைமையின் போது சிறைக் காவலர்களால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் போனது. அனர்த்த நிலையிலேயே அவ்வப்போது, சிறைகளில் ஏற்படும் மோதல் நிலைமைகளை கருத்தில் கொண்டு இத்தகைய விஷேட படையணி ஒன்றின் தேவை உணரப்பட்டுள்ளதாகவும் அதன் பிரகாரம் இந்த சிறப்பு படைப் பிரிவு ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் அரச உயர் மட்ட தகவல்கள் தெரிவித்தன.