புதிய வகை கொரோனா தொற்று : சிங்கப்பூரிலும் பரவல்!

114681249 111994852 gettyimages 1210284242 1 1
114681249 111994852 gettyimages 1210284242 1 1

பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை கொரோனா தொற்று, சிங்கப்பூரிலும் பரவியுள்ளமை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து சிங்கப்பூருக்குத் திரும்பிய 17 வயது மாணவி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கமைய இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  ஐரோப்பிய நாடுகளில் இருந்து  சிங்கப்பூர் திரும்பியவர்களில் மேலும் 11 பேருக்கு,  குறித்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஃபைசர்-பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசி என்பன, டுபாயின் ஐந்து முக்கிய நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன

இதன்படி, 84 வயதான சிரேஷ்ட பிரஜை ஒருவர், பொலிஸ் அதிகாரி ஒருவர், தாதி ஒருவர், அம்பியூலன்ஸ் ஓட்டுநர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர் ஒருவர் ஆகியோருக்கே இவ்வாறு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், முன்னுரிமை அடிப்படையில் குறித்த தடுப்பூசி விநியோகிக்கப்படும் என ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.