யாழ் பாதுகாப்பு படையினரால் வறிய குடும்பத்திற்கு புதிய வீடு

potpathi
potpathi

யாழ் பாதுகாப்பு படையினரால் வறிய குடும்பத்திற்கு யாழ் அம்பன் பொட்பதியில் வசிக்கும் வறிய குடும்பத்திற்கு வீடு வழங்கப்பட்டுள்ளது.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படை வீரர்களைக் கொண்டு யாழ் அம்பன் பொட்பதியில் வசிக்கும் வரிய குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு 21 ஆம் திகதி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் தமழீழ விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டதன் பின்னர் யாழ் தீபகற்பத்தில் யாழ் பாதுகாப்பு படையினரால் வறிய குடும்பங்களுக்காக நிருமாணிக்கப்பட்ட 698 ஆவது வீடாகும்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த மனிதாபிமானமான நடவடிக்கையின் பின்னர் யாழ் தீபகற்பத்தில் யாழ் பாதுகாப்பு படையினரால் அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நன்கொடையாளிகளின் அனுரசணையுடன் கடந்த பத்து வருடத்திற்குள் வறிய குடும்பங்களுக்காக 697 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.இதில் பொட்பதியில் வசிக்கும் வரிய குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடானது 698 ஆவது வீடாகும்.

2009- 2019 வரையான காலப் பகுதியில் மொத்தமாக 700 வீடுகளாக பூரணப்படுத்தும் முகமாக தற்பொழுது நிருமாணிக்கப்பட்டு வரும் மேலும் 02 வீடுகளை மிக விரைவில் வழங்க யாழ் பாதுகாப்பு படையினரால் தீர்மானித்துள்ளது.

பொட்பதியில் இடம்பெற்ற இப்புதிய வீட்டை கையளிக்கும் நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி நன்கொடையாளியின் பிரதிநிதிகள் மரதன்கேணி பிரதேச செயலக செயலாளர் திரு கே.கணகேஸ்வரன், படைப் பிரிவின் படைத் தளபதிகள், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர், பொது நிருவாக அதிகாரி 551 மற்றும் 553 ஆவது படைத் தலைமையகத்தின் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், பயனாளியினரது உறவினர்கள் மற்றும் அயலவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் இடம்பெற்ற கத்தோலிக்க சமய வழிபாடினைத் தொடர்ந்து யாழ் பாதுகாப்பு படைத் தளபதி இப்புதிய வீட்டினை குறித்த கடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து திறந்து வைத்தார்.

படையினரின் இவ் மனிதாபிமானமான பங்களிப்பிற்கு அக் குடும்பத்தினர் தங்களது மனப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர்.