சுகாதார அமைச்சின் செயலாளராக அனுருத்த

anurutha patheniya
anurutha patheniya

சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனியவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வைத்தியர் பாதெனிய சுகாதார அமைச்சின் செயலாளர் பதவிக்கு தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை அரச தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடிக்கடி வேலை நிறுத்தங்களிற்கு அழைப்பு விடுத்து அனுருத்த பாதெனிய முன்னின்று நடத்தியதாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.