வவுனியாவில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கடமைகளை சீராக செய்வதில்லை – சுகாதார வைத்திய அதிகாரி குற்றச்சாட்டு

IMG 20201229 WA0037
IMG 20201229 WA0037

வவுனியா மாவட்டத்திலுள்ள தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அவர்களது கடமைகளை சீராக செய்வதில்லை என பிரதி சுகாதார வைத்திய அதிகாரி துஸ்யந்தன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று காலை(29) இடம்பெற்ற கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கிராம சேவையாளர்கள், சுகாதார பரிசோதகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கைகளை வழங்குகின்ற போதிலும், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அவர்களை பார்வையிட செல்வதில்லை எனவும் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் இவ் அலட்சிய செயற்பாடுகள் தொடர்பாக முழுமையான விபரமும் இருப்பதாக பிரதி சுகாதார வைத்திய அதிகாரி துஸ்யந்தன் குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர்களின் விபரங்களை வழங்குமாறு வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்திருந்தமையுடன் இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தான் எழுத்து மூலம் கடிதம் வழங்குவதாகவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன உறுதியளித்தார்.