நாவல்காடு பகுதியில் காணப்பட்ட மனித உடற் பாகங்களை மீட்கும் பணிகள் ஆரம்பம்

received 400946051159345
received 400946051159345

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பகுதியில் நேற்று இனம் காணப்பட்ட மனித உடல் பாகங்களை மீட்கும் பணிகள் நீதிமன்ற அனுமதிக்கு அமைவாக இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் பதில் நீதிபதி ந.சுதர்சன் முன்னிலையில் குறித்த அகழ்வு மற்றும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த இடத்தில் தடயவியல் காவல்துறையினர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இணைந்து குறித்த உடற்பாகங்கள் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.