காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு 5 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில்

GA1
GA1

மட்டக்களப்பு காத்தான்குடியில் அதிகளவான கொரோனா தொற்றாளார்கள் கண்டறியப்பட்டதையடுத்து எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு தனிமைப்படுத்தல் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் கே. கருனாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலனிக் கூட்டம் நேற்று (30) மாலை 6 மணிக்கு அவசரமாக மாவட்ட அரசாங்க அதிபர் கருனாகரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகர்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட 549 ரபிட் அன்டிஜன் பரிசோதனையின்போது 26 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 23 நபர்களும், ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இரவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் காத்தான்குடி பிரதேசத்தின் பல பாகங்களிலும் மேற் கொள்ளப்பட்ட 665 ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளின் போது 27 நபர்கள் இணங்காணப்பட்டுள்ளனர். இவ்விரு பிரதேசங்களிலுமாக காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 50 நபர்களும் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த 9 நபர்களும் உள்ளடங்குகின்றனர் என  அவர் தெரிவித்தார். 

இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட பிரதிகாவல்துறைமா அதிபர் லக்சிறி விஜயசேன, பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர். எஸ். மயூரன், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவான், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், இரானுவ உயர் அதிகாரி, மற்றும் சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர