கல்முனை பிரதேச செயலகத்தில் புத்தாண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

vlcsnap 2021 01 01 10h43m21s438
vlcsnap 2021 01 01 10h43m21s438

கல்முனை பிரதேச செயலகத்தின் 2021ஆம் ஆண்டு ஆரம்ப முதல் நாளான இன்று கடமைகளை பொறுப்பை ஏற்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எம்.நசீர் தலைமையில் நடைபெற்றது.

முதல் நாள் தேசியக்கொடி ஏற்றப்பட்டு நாட்டின் அமைதிக்கும் சட்டத்திற்கும் மதிப்பளித்து அரச சேவை உறுதியுரையான சத்தியப்பிரமாணம் செய்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அலுவலக உத்தியோகத்தர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பொது மக்களின் தேவைகளுக்காக கடமை ஆற்ற வேண்டிய அவசியத்தை பிரதேச செயலாளர் வலியுறுத்தியதோடு உறுதியான எண்ணத்துடன் நேர்மையாக மக்களுக்கு சார்பாக சேவையாற்றுவதுடன் கடந்த ஆண்டில் சிறப்பான முன்னெடுப்புக்களை மேற்கொண்ட அலுவலக உத்தியோகத்தர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்து பாராட்டினார்.

பிரதேச செயலக வளாக முன்றலில் நடைபெற்ற இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை தெற்கு வைத்திய அதிகாரி றிஸ்னி முத்து, பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லாஹ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஹ்பர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்ஸான், சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், , நிர்வாக கிராம உத்தியோகத்தர், யூ.எல்.பதுறுத்தீன், பதிவாளர் பிரிவின் மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.ரீ.எம் கலீல், காணிப் பிரிவின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் யூ.எல்.எம்.றமீஸ் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள், பட்டதாரி பயிலுனர்கள், ஒரு லட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.