கொத்து மற்றும் சிற்றுண்டி உணவுகளை உண்பதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும்- பேராசிரியர் நிலிகா மலவிகே!

625.0.560.350.160.300.053.800.668.160.90 11
625.0.560.350.160.300.053.800.668.160.90 11

நாட்டில் தற்சமயம் காணப்படும் கொரோனா அச்சத்தை குறைப்பதற்கு மக்கள் தமது பங்களிப்பினை முழுமையாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலிகா மலவிகே இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய இவர் கொத்து மற்றும் சிற்றுண்டி உணவுகளை உண்பதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான உணவுகளை உண்பதனால், உடலில் கொரோனாவை எதிர்க்கும் சக்தி குறைவடைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.