பல்கலைக்கழக எதிர்ப்பையும் மீறி மாவீரர் நினைவேந்தல்

72617604 722691731572727 5663902398347739136 n
72617604 722691731572727 5663902398347739136 n

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரா் நினைவு தூபியில் மாவீரா் நாள் நினைவேந்தலை நடாத்துவதற்கான சகல ஒழுங்குகளையும் பல்கலைக்கழக மாணவா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

தமிழீழ மாவீரா் நாள் நினைவேந்தல் வடகிழக்கு மற்றும் புலம்பெயா் தேசங்களில் உணா்வுபூா்வமாக அனுட்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில் யாழ்.பல்கலைகழக வளாகத்திலும் மாவீரா் நாள் நினைவேந்தல் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை யாழ்.பல்கலைகழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாாி க.கந்தசாமி யாழ்.பல்கலைகழக வளாகத்தில் 26, 27ம் திகதிகளில் எந்தவொரு நிகழ்வுகளும் நடாத்தகூடாது என தடை விதித்துள்ளாா்.

எனினும் யாழ்.பல்கலைகழக மாணவா்களால் மாவீரா் தினத்திற்கான ஒழுங்குகள் முன்னதாகவே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதன்படி நண்பகல் 12 மணியளவில் மாவீரா் நினைவு தூபிக்கு மலா்மாலை அணிவித்து 1000 மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளதுடன், மாலை 6மணி 5 நிமிடத்திற்கு மாவீரா்களுக்கான ஈகை சுடரேற்றப்பட்டு அங்கலி இடம்பெறவுள்ளது.