புதிய அமைச்சின் செயலாளர்களின் நியமனம் இன்று

presient office
presient office

புதிய அமைச்சின் செயலாளர்களின் நியமனம் இன்று(Nov.27) இடம்பெறவுள்ளது.

காபந்து அரசாங்கத்தின் 15 அமைச்சர்கள் அண்மையில் நியமனம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் அமைச்சின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்களை நியமிக்க குழுவொன்றை ஜனாதிபதி நியமித்திருந்தார். அந்த குழுவின் தெரிவின் அடிப்படையில், இன்று புதிய செயலாளர்கள் இன்று நியமிக்கப்படவுள்ளனர்.

இன்று இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் நியமனம் இடம்பெற்ற பின்னர், அமைச்சின் செயலாளர் நியமனம் இடம்பெறவுள்ளது.

அமைச்சர்கள் மற்றும் அவர்களின் கீழ் வரும் நிறுவனங்களின் விடயதானங்களை ஒதுக்கும் வர்த்தமானி அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளிவருமென தெரிவிக்கப்படுகிறது.