மஹர சிறைச்சாலை கலவரம் ; அறிக்கை இன்று கையளிப்பு

mahara
mahara

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை துரிதமாக செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நீதியமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற இந்த மோதல் சம்பவம் தொடர்பில் நீதியமைச்சரினால் இந்த குழு நியமிக்கப்பட்டிருந்தது.

அதன் தலைவராக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன செயற்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அந்த குழுவின் அறிக்கை நிறைவு செய்யப்பட்டு கடந்த 30 ஆம் திகதி நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

மஹர சிறையில் இடம்பெற்ற மோதலில் 11 கைதிகள் கொல்லப்பட்டனர்.

அதில் 8 பேரின் சடலங்களின் மீதான பிரேத பரிசோதனை நிறைவுசெய்யப்பட்டதோடு அவற்றை தகனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் 3 சடலங்கள் மீது பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.