கைத்தொழில் அமைச்சின் புதிய செயலாளராக அனுஷ பெல்பிட்ட இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்!

anusha pelpita interdicted 2
anusha pelpita interdicted 2

கைத்தொழில் அமைச்சின் புதிய செயலாளராக அனுஷ பெல்பிட்ட இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கைத்தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற சமய நிகழ்வுகளின் பின்னர் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, முன்னதாக, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பிரதான நிர்வாக அதிகாரியாக அனுஷ பெல்பிட்ட கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது