சுற்றுலாப் பயணிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது ஒரே விதிகளை விதிக்க முடியாது:சுற்றுலாத்துறை அமைச்சர்

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் இரு வகையினருக்கும் ஒரே சுகாதார விதிமுறைகளை விதிக்க முடியாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகள் தெரிவுசெய்யப்பட்ட இடங்களுக்கு குழுக்களாக மட்டுமே பயணிப்பர். இதேவேளை புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்கள் வந்த பின் சமூகத்தில் ஒருங்கிணைக்கப்படுவர் என்பதே இதற்குக் காரணம் என்றார்.

மேலும் சுற்றுலாப்பயணிகள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கே நாட்டில் இருப்பதாகவும் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டில் தங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான விதிமுறைகள் மேலும் நீடிக்கப்படும் என்றும் அவை சமூகத்துக்கு அச்சுறுத்தலாக இல்லை என்பதைக் கண்டறிய மேலதிக நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.