திவுலபிட்டிய, பேலியகொட தொற்றாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியது

vikatan 2020 04 f45d074e b3e4 4275 a972 d0d1cf3882dd Coronavirus research 2 2
vikatan 2020 04 f45d074e b3e4 4275 a972 d0d1cf3882dd Coronavirus research 2 2

நாட்டில் மேலும் 484 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 479 திவுலபிட்டிய ,பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திவுலபிட்டிய ,பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 977 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 05 கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 726 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 7 ஆயிரத்து 249 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 262 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 217ஆக அதிகரித்துள்ளது.