135 மில்லியன் பெறுமதியான எக்ஸ்டஸி போதை மாத்திரைகள் மீட்பு!

IMG 20210107 WA0004 1
IMG 20210107 WA0004 1

பெல்ஜியத்திலிருந்து கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்திற்கு விமான அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்ட ஒரு தொகை எக்ஸ்டஸி போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஒன்பது கிலோ கிராம் எடையுள்ள 18 ஆயிரத்துக்கும் அதிகமான எக்ஸ்டஸி போதை மாத்திரைகளையே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. 

இவற்றின் பெறுமதியானது 135 மில்லியன் ரூபா என தெரிவித்துள்ள சுங்கப் பிரவு அதிகாரிகள் இலங்கை வரலாற்றில் அதிகளவான எக்டஸ்ஸி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளமை இது முதல் சந்தர்ப்பமாகும் என்றும் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூன்று கொழும்பு -05 பகுதியில் வசிப்பவரின் முகவரிக்கு பூனைகளுக்கான உணவு எனும் பொதியினுள் சூட்சுமமான முறையில் ஏயர் மெயில் வழியாக கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

பொதிகள் குறித்து சந்தேகம் அடைந்த சுங்க போதைப்பொருள் பிரிவு அதிகாரிகள் முகவரி குறித்து விசாரித்ததோடு, முகவரி மோசடி என்று தகவல் வெளிவந்ததையடுத்து பொதிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையிலேயே இந்தளவான எக்ஸ்டஸி போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

ஆசிய நாட்டில் இவ்வளவு பெரிய எக்ஸ்டஸி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும். 

இதேபோல், கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்திற்கு ஏயர் மெயில் மூலம் அனுப்பப்பட்ட 08 பொதிகளை பின்னர் சந்தேகத்திற்கின் அடிப்படையில் சுங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டன. 

அந்த பொதிகளில் 16 கிலோ கிராம் எடையுள்ள காத் புகையிலையை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக சுங்க போதைப்பொருள் பிரிவினால் காவற்துறையினர் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.