ஜனாதிபதி இந்தியா பயணம்

gr visit to india
gr visit to india

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (Nov.28) நண்பகல் இந்தியாவிற்கான இரண்டு நாள் அரச விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கவுள்ளதுடன், இந்திய பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ஏனைய இந்திய பிரமுகர்கள் பலரை சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, திறைசேரி செயலாளர் சஜித் ஆட்டிகல, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார ஆகியோரும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.