மீன், மரக்கறி வியாபார நிலைகளில் ரபிட் ஆன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம் – அஜித் ரோஹண

சிறியளவில் மரக்கறி, மீன்களை விற்பனை செய்வோர் சந்தை, வராந்த சந்தை, பொருளாதார மத்திய நிலையம் ஆகியவற்றில்  ரபிட் ஆன்டிஜன் பரிசோதனைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என காவற்துறை ஊடக பேச்சாளரும், பிரதி காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் மீன் சந்தை நடவடிக்கைகளில் ஈடு பட்டுள்ள 577 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் ரபிட் ஆன்டிஜன் பரிசோதனைகளில் இதுவரை இருவர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என காவற்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் மீன் விற்பனை செய்யப்படும் இடங்களில் 577 பேருக்கு கடந்த 28ஆம் திகதி முதல் தற் போதுவரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த பரிசோதனையில் இருவர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சிறியளவில் மரக்கறி, மீன்களை விற்பனை செய்வோர் சந்தை, வராந்தா சந்தை, பொருளாதார மத்திய நிலையம் ஆகியவற்றில் ரபிட் ஆன்டிஜன் பரிசோதனை எதிர்காலங்களில் மேற்கொள்ளப்படும்.

இதன்மூலம் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப் படுத்த முடியும் என்று தாம் நம்புவதாகவும் பொதுமக்கள் இதற்கு ஒத்துழைக்கவேண்டும் என்றும் காவற்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.