மன்னாரில் டெங்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம்

dengue alert
dengue alert

மன்னார் மாவட்டத்தில் டெங்கு அபாயம் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை இன்றைய தினம் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகமாக காணப்படும் நேரங்களான காலையிலும்,மாலையிலும் 5 மணி முதல் 8 மணி வரையுமான காலப்பகுதியில் நுளம்பு கடித்தலில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

காய்ச்சல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அரச வைத்திய சாலைகளில் அல்லது தகுதி வாய்ந்த வைத்திய அதிகாரி ஒருவரிடம் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவும்.

வைத்திய ஆலோசனைகளை புறக்கணிக்க வேண்டாம் என்பதுடன் காய்ச்சல் காலங்களில் வலி நிவாரண மாத்திரைகள்,அஸ்பிரின் போன்ற மாத்திரைகளை உபயோகிக்க வேண்டாம் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை விடுத்துள்ள துண்டுப்பிரசுரத்தின் குறிப்பிடப்பட்டுள்ளது.