பிரதி அமைச்சர்கள் இராஜாங்கஅமைச்சர்களாக நியமனம்

presient office
presient office

இடைக்கால அரசில் பிரதி அமைச்சர்களாக நேற்று நியமனம் வழங்கப்பட்டமூவர் இன்று இராஜாங்க அமைச்சர்களாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று காலை பதவியேற்றுள்ளனர்.

  • நிமல் லன்சா – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்
  • காஞ்சன விஜேசேகர – தேயிலை தொழில்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
  • இந்திக்க அநுருத்த – வீட்டு வசதித் துறை இராஜாங்க அமைச்சர்

இதன்மூலம் இடைக்கால அரசில் 15 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 38 இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை அங்கஜன் இராமநாதன், சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோருக்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பதவி வழங்குவதற்கான பேச்சுக்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.