ஐ.தே.க தலைமை :48 மணிநேரத்தில் தீர்வு

mano kanesan
mano kanesan

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர் பதவி தொடர்பான பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று (Nov.28) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தின் முடிவில் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்தவகையிலும் பிளவு ஏற்படவில்லை என கூறினார்.

இதன் போது கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க ஐக்கிய தேசிய கட்சி ஒற்றுமையோடு முன்னோக்கி பயணிக்கும் என கூறினார்.

சஜித் பிரேமதாச சுகயீனமடைந்துள்ளதன் காரணமாக இன்றைய கூட்டத்தில் அவர் கலந்துக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரில் ஒருவர் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டால் மற்றையவர் கட்சித் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.