வெற்றியை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி

west indies
west indies

ஆப்கானிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் மேற்கிந்திய தீவுகளிற்கு வெற்றிவாய்ப்பு அதிகளவில் காணப்படுகிறது.

லக்னோவில் நடைபெற்று வருகின்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாடுவதற்கு பணித்திருந்தது,

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 187 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. கார்ன்வெல் 75 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

தனது 2வது இன்னிங்சை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி 277 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. துடுப்பெடுத்தாட்டத்தில் புரூக்ஸ் 111 ஓட்டங்களையும், கம்பெல் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் அமிர் ஹம்சா 5 விக்கெட்டும், ரஷித் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆப்கானிஸ்தான் தனது 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்களை பெற்றுள்ளது.

2வது இன்னிங்சில் கைவசம் மூன்று விக்கெட்டுக்கள் உள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் 19 ஓட்டங்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி எளிதாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுகிறது,