கொரேனாவால் பாதிக்கப்பட்ட காத்தான்குடி மக்களுக்கு உதவி பொருட்கள் வழங்கி வைப்பு

01 3
01 3

கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தலில் காணப்படும் காத்தான்குடி பிரதேச மக்களுக்கு உதவும் வகையில் கல்குடா பகுதியில் இருந்து உலர் உணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டது.

கொரோனா முடக்க நிலைக்கு உட்பட்டுள்ளமையினால் கொவிட் 19 ரமழான் கால நிவாரணப் பணிகளுக்கான சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பு, ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகம் மற்றும் கல்குடா ஜனாஸா நலன் மற்றும் சமூக சேவைகள் அமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திடம் கோதுமை மா பொதிகளை கையளித்தனர்.

இதன்போது இரண்டாயிரத்து ஐந்நூறு (2500) கிலோ கிராம் எடை கொண்ட கோதுமை மா பொதிகளை பாதிக்கப்பட்ட மக்களின் பயன்பாட்டிற்காக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திடம் கைளிக்கப்பட்டது.