நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் சிறப்புற இடம்பெற்ற மரபுவழி பொங்கல் வழிபாடு!

IMG 4885
IMG 4885

சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு – நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில், வருடந்தோறும் இடம்பெறும் தைத்திருநாளினை முன்னிட்டதான மரபு வழி விசேட பொங்கல் வழிபாடுகள் 13.01.2021 இன்றைய நாள் மிகவும் சிறப்புற இடம்பெற்றது.

குறித்த பொங்கல் வழிபாடுகளில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான விஜயகுமார் நவநீதன் மற்றும் பெருந்திரளான அடியவர்களும் கலந்திருந்தனர்.

மேலும் நீராவியடிப்பிள்ளையார் ஆலயச் சூழலில் பெருந்திரளான காவல்துறையினரும், புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது