மாத இறுதியில் இந்தியா கொரோனா வைரஸ் மருந்தினை இலங்கைக்கு வழங்கவுள்ளது- இராஜாங்க அமைச்சர்

india me
india me

இந்தியா தனது நாட்டில் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ் மருந்தினை மாத இறுதியில் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கவுள்ளது.


இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.
இருநாடுகளிற்கும் இடையிலான நல்லுறவின் அடிப்படையில் இந்தியா கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகள் தடுப்பூசியை வழங்குவதற்கு அந்த நேரத்தில் தயாராகயிருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் மருந்தினை கொள்வனவு செய்யும் முகவராக அரசமருந்தாக்கல் கூட்டுத்தாபனம் செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


நாடு முழுவதும் மருந்து செலுத்துவதற்கான 4000 மருந்துகளை அதிகாரிகள் உருவாக்கி வருகின்றனர் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.


முன்னுரிமை அளிக்கவேண்டியவர்கள் குறித்து தீர்மானித்துள்ளோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.