வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நான்கு பேருக்கு கொரோனா

திரும்பினர் 3
திரும்பினர் 3

இலங்கையில் வெளிநாட்டில் இருந்து வந்த மேலும் நான்கு பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று 16) காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியுடன் மொத்தம் 695 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்று உறுதியானவர்களில் நாடு திரும்பிய எட்டு இலங்கையர்களும் நான்கு வெளிநாட்டவர்களும் அடங்குவதாக கொரோனா தடுப்புக்கான தேசிய கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்றும் மத்திய கிழக்கு, ஜேர்மனி, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்தும் பலர் நாடு திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.